Sunday, March 15, 2015

இறால் மீன் வறுவல்

என்னென்ன தேவை?

இறால் -1/2 கிலோ
சின்னவெங்காயம்- 50 கிராம்
பச்சை மிளகாய் - இரண்டு இஞ்சிப் பூண்டு விழுது 2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்  - 1 டீஸ் பூன்
மல்லித்தூள் - 1/2 டீஸ் பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ் பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ் பூன்
கடுகு உளுந்து, கறிவேப்பிலை - தாளிக்க சிறிதளவு
எப்படிச் செய்வது?

முதலில் சின்னவெங்காயம், பச்சை மிளகாயை மிக்சியில் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இதனுடன் அரைத்து வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். இதனுடன், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சுத்தம் செய்த இறால் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து தீயை குறைந்த அளவில் வைத்து சிவக்கும் வரை வறுக்கவும். நாவில் நீர் ஊறச்செய்யும் இரால் வறுவல் ரெடி.




No comments:

Post a Comment